×

மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்: காஞ்சி எஸ்பி சண்முகம் பேட்டி

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று மாவட்ட எஸ்பி சண்முகம் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு, அறையுடன் கூடிய காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற செயல் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும், 30 இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் ஏஎஸ்பி உதயகுமார் தலைமை வகித்தார். இதில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகம், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய காவல் உதவி மையத்தை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 16 கேமராக்கள் ஏஎன்பிஆர் தொழில் நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகையான சிசிடிவி கேமராக்கள் வாகன எண்களை துல்லியமாக கண்டறியும். மேலும், இந்த மையத்தில் 1 காவல் உதவியாளர், 2 காவலர்கள் எப்போதும் பணியில் இருப்பார்கள். மாவட்டம் முழுவதும் பழுதடைந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’ என்றார். இந்நிகழ்வில், போலீசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்: காஞ்சி எஸ்பி சண்முகம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kanchi SP Shanmugam ,Sriperumbudur ,SP ,Shanmugam ,Kanchipuram district ,Chungwarchatram ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல்...